பொங்கலை கோலாகல‌மாக மாற்ற வரும் ரஜினி ,அஜித்,கமல், விஜய் படங்கள்

அடுத்த மாதம் ரஜினிகாந்த், கமல் ஹாஸன், அஜீத் மற்றும் விஜய் ஆகியோரின் படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன.
பொங்கலுக்கு அஜீத்தின் வீரம், விஜய்யின் ஜில்லா ஆகிய படங்கள் ரிலீஸாவது உறுதியாகியுள்ளது. பொங்கலுக்கு வருவதாக இருந்த ரஜினியின் கோச்சடையானின் ரிலீஸ் தேதி தள்ளிப் போகும் என்று தெரிகிறது.

இந்நிலையில் ஜனவரி மாதம் கமல் ஹாஸனின் விஸ்வரூபம் 2 படம் ரிலீஸ் ஆகிறது. இந்த 4 படங்களின் இசை வெளியீட்டு விழாக்கள் அடுத்த மாதம் நடைபெறுகிறது.

 

கோச்சடையான் படத்தின் இசை வெளியீட்டு விழா ரஜினிகாந்தின் பிறந்தநாளான டிசம்பர் 12ம் தேதி நடைபெறுகிறது. படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

டிசம்பர் 15ம் தேதி விஜய்யின் ஜில்லா பட இசை வெளியீட்டு விழா நடைபெறுகிறது. படத்திற்கு இமான் இசையமைத்துள்ளார். படத்தில் இளைய தளபதி விஜய் கண்டாங்கி கண்டாங்கி என்ற பாடலை பாடியுள்ளார்.

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத் நடிப்பில் வெளியாகும் வீரம் படத்தின் இசை டிசம்பர் 18ம் தேதி வெளியிடப்படுகிறது. படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

 

கமல் ஹாஸன் தயாரித்து இயக்கி நடித்திருக்கும் விஸ்வரூபம் 2 படத்தின் இசை டிசம்பர் 26ம் தேதி வெளியிடப்படுகிறது. படத்திற்கு ஷங்கர் எஹ்சான் லாய் ஆகியோர் இசையமைத்துள்ளனர். படம் ஜனவரி இறுதி வாரத்தில் ரிலீஸாகிறது.

விரைவில் காலில் சத்திரசிகிச்சை செய்ய அஜித் முடிவு!

ஆரம்பம் படத்தின் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது அஜீத்துக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டு சதை கிழிந்தது. அதை பொறுத்துக்கொண்டுதான் ஆரம்பத்தில் நடித்து முடித்தார். அடிக்கடி அவருக்கு கால்வலி ஏற்பட்டபோதும் படப்பிடிப்புகளை ஏற்பாடு செய்து விட்ட தயாரிப்பாளர் பாதிக்கபடக்கூடாது என்பதற்காக தொடர்ந்து நடித்தார். அடுத்து வீரம் படத்திலும் நடிக்க ஆரம்பித்து விட்டார். வீரம் படப்பிடிப்புகள் டிசம்பர் 15ந் தேதியுடன் முடிவடைகிறது. அதன் பிறகு காலில் ஆபரேஷன் செய்து கொள்ள முடிவு செய்திருக்கிறார்.

சமீபத்தில் கடும் வலி காரணமாக மருத்துவர்களிடம் ஆலோசனை பெற்ற அஜீத் இந்த ஆபரேஷன் முடிவை எடுத்துள்ளார். ஆபரேஷன் முடிந்ததும் 60 நாட்கள் தொடர்ந்து வீட்டில் ஓய்வெடுக்க முடிவு செய்துள்ளார். அதன்பிறகு மார்ச் மாதத்தில் இருந்து கவுதம் மேனனின் படத்தில் நடிக்க முடிவு செய்திருக்கிறார்.